இலங்கையில் முன்னேற்றம் . விடுலைப்புலிகளுடன் தொடர்புடையவர்களுக்கு இடமில்லை

272

25360

இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களின் தமிழ் அரசியல் தஞ்சக் கோரிக்கைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை என சுவிட்சர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சுவிட்ஸர்லாந்தின் குடிவரவுத்துறை செயலகம் இதனை தெரிவித்துள்ளதாக சுவிஸ்ன்போ.கொம் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் மனித உரிமைகளின் நிலவரம் மேம்பட்டு வருகிறது இலங்கையில் ஒன்றுக் கூடுவதற்கான சுதந்திரம், கருத்து வெளியிடும் சுதந்திரம் போன்றவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோருகின்ற விடுதலைப்புலிகளுக்கு இடம்தரமுடியாது.

அத்துடன் அவர்களுடன் தொடர்புகளை பேணுத் அகதிகள் தொடர்பில் ஈழ அகதிகள் தொடர்பில் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் சுவிட்ஸர்லாந்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE