
வியாபார நோக்கிலும், ஹஜ்ஜுக்காகவும் அரேபியா சென்றுவந்த அவர்கள், அங்கு தாம் கற்றவற்றை இலங்கையில் அறிமுகம் செய்தனர். ஷரீஅத்தை அமுலாக்கம் செய்வதற்கான வழிகளையும் செய்தனர். இப்படி ஷரீஅத்தை அமுலாக்கம் செய்தவர்களுல் “அப்துர்-ரஹ்மான் அபீ ஹாஷிம் ஸெய்லானி என்பவர் முக்கியமானவர்.
இவர் இஸ்லாமிய சட்டங்களைத் தமிழில் எழுதி வெளியிட்டபோதும், அதற்கு எவரும் எத்தகைய தடைப்பாடுகளையும் விதிக்கவில்லை.
#போர்த்துக்கீஷர், ஒல்லாந்தர் காலங்கள்
போர்த்துக்கீஷரின் வருகையோடு, அதுவரை அரேபியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நிலவி வந்த தொடர்புகள் துண்டிக்கப்பட்டன இவர்களது அச்சுறுத்த்லுக்குப் பயந்து முஸ்லிம்கள் ஒதுங்கி வாழ்ந்தார்கள்.
பின்வந்த ஒல்லாந்தரும் தம் மதத்தைப் பரப்புவதில் தீவிரம் காட்டியதால், முஸ்லீம்களின் கல்வி நிலை தேக்கமடைந்து, அதனால் அவர்கள் பல வழிகளிலும் பின்தங்கினர்.
டச்சு கவர்னர் வில்லியம் பெலக் ( 1765 – 1785 ) இலங்கைக்கென ஒரு சட்ட முறையை அறிமுகப்படுத்தியதோடு, இங்கிருந்த முஸ்லீம்களுக்கென தனியான சட்டவாக்கம் ஒன்றை உருவாக்கவும் வழி செய்தார்.இதற்கு முஸ்லிம்கள் ஒத்துழைப்பு வழங்கப் பயந்து பின்நின்றதால், பதேவியாவில் (இந்தோனேஷியா) இருந்த முஸ்லிம்கள் பின்பற்றும் சட்டத்தொகுப்பை வருவிக்கச் செய்து இலங்கையில் அறிமுகம் செய்தார், கவர்னர் பெலக்.
#ஆங்கிலேயர் காலம்:
இவர்களும் ஒல்லாந்தர் அறிமுகம் செய்த சட்டத்தையே நடைமுடைப்படுத்திய போதும், தலைப்பை மாத்திரம் “முஹம்மதியர்: அல்லது ” சோனகர் சம்பந்தமான விஷேட சட்டங்கள்” என மற்றி அமைத்தனர்.
1806 ல் உயர் நீதியரசர் அலக்ஸாண்டர் ஜோன்ஸ்டன் கவர்னரிடம் முன்வைத்த, தனியார் சட்டம் தொடர்பான சில திருத்தங்களுடனான சட்டக் கோவை அமுலுக்கு வந்தது.
இது ஆரம்பத்தில் கொழும்பு மாவட்ட முஸ்லிம்களுக்கு மட்டும் என்றிருந்து, பின்னர் முழு முஸ்லீம் சமூகத்துக்கும் என ஆகியது.
காலப்போக்கில் பிரச்சினகள் அதிகரிக்க, அதிகரிக்க இச்சட்டக் கோவை பயனற்றதென உணரப்பட்டதால், நாட்டிலுள்ள ஏனைய சமூகங்களின் சட்டங்களைக்கொண்டு தீர்ப்பளிக்க வேண்டிய நிர்ப்ப்பந்த நிலை ஏற்படலாயிற்று.
இக்காலத்தில் இச்சட்டக் கோவைக்கு வெளியே சென்றும் தீர்ப்பு வழங்கலாம் என அப்போதைய காலி மாவட்ட வழக்கறிஞர் “கில்மன்” ஒரு தீர்ப்பு வழங்கியதால் இது தொடர்பாகப் பல விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் தனியார் சட்டத்தை அமுல் நடாத்த முஸ்லீம்களுக்கும் பூரண அதிகாரம் வழங்கும் வகையிலான ஒரு சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் எனும் பிரேரனை ஒன்றை என். எச். அப்துல் காதர் கொண்டு வந்தார்.
இதனை மேற்கொள்ளவென எம். டீ. அக்பர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு 1928 ல் இரு முக்கிய சட்டத் தீர்ப்புக்களை முன்வைத்தது.
1. திருமணம், விவாகரத்துத் தொடர்பான சட்டம்
2. இவ்விரண்டும் பதியப்படவேண்டும் எனும் சட்டம்
இக்காலத்தில் முன்னைய ‘முஹமதியர் சட்டம்’ என்பதில் இருந்த முஹமதியர் எனும் பதம் நீக்கப்பட்டு இஸ்லாமிய சட்டம் என அறிமுகமாகியது.
1939ல் இச்சட்டமும் மாற்றப்படவேண்டும் என்பதற்கிணங்க, பதிவாளர் நாயகத்தின் தலைமையின் கீழ் நியமிக்கப்பட்ட ஒரு குழு, 1951ல் 13ம் இலக்க புதிய சட்டத் திருத்தம் ஒன்றை அறிமுகம் செய்தது.
இக்குழுவில் M .T. அக்பர், T.B. ஜாயா, சம்சுதீன் போன்றோர் அங்கதுவம் வகித்தனர்.
1954ல் நடைமுறைக்கு வந்த இச்சட்டமே இன்றுவரை நடைமுறையில் இருந்து வருகிறது.
இவ்வாறான பல பரிமாணங்களில் மற்றம் கண்ட இலங்கையின் முஸ்லீம் தனியார் சட்டம் ஏன் இன்று மாற்றத்துக்கு உட்படக்கூடாது .
இலங்கையில் முஸ்லீம் சமூகத்துக்கு கிடைத்த இப்படியான வரப்பிரசாதங்கள் எமது போராட்டங்களினால் அல்ல எமது நற்பண்புகளால் (அஹ்லாக்) களினால் நடத்தைகளினால் என்பதினை மறந்துவிடல் ஆகாது
முஸ்லீம்களின் தனியார் சட்டம் பற்றி அப்துல் ரஸ்ஸாக்கும் SLTJ யும் நிறையவே கட்கவேண்டி இருக்கின்ற