இலங்கையில் வருடாந்தம் மூளை வளர்ச்சி குன்றிய 37500 குழந்தைகள் பதிவு

283
இலங்கையில் வருடாந்தம் 37500 மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பதிவாகின்றன என சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் மனநோயாளர் பிரிவு பணிப்பாளர் டொக்டர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஐந்து வயதுக்கும் குறைந்த 185000 குழந்தைகள் ஏதேனும் ஓர் வகையில் மூளை வளர்ச்சியின்றி வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஓர் நிலையில் இலங்கையில் தகுதி பெற்ற சிறுவர் உளவியல் மருத்துவ நிபுணர்கள் நான்கு பேர் மட்டுமே சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மருத்துவ நிபுணர்களின் தட்டுப்பாட்டுக்கு துரித கதியில் தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியமானது என டொக்டர் டி சில்வா தெரிவித்துள்ளார்.

mother_child_HR+%283%29

SHARE