இலங்கையில் வேலை வாய்ப்பு அற்றவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

262

1

இலங்கையில் வேலை வாய்ப்பு அற்றவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. வேலையற்றோர் வீதம் 4.2 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சனத்தொகை புள்ளி விபரவியல் மதிப்பீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சேவைத் துறையில் அதிகளவு தொழில் வாய்ப்புக்கள் ஏற்பட்டமையே இதற்கான காரணமாகும். முதல் காலாண்டு இறுதியில் நாட்டின் பணிகளில் ஈடுபட்டு வருவோரின் மொத்த எண்ணிக்கை 7,969,000 ஆகும்.

இந்தக் காலப் பகுதியில் சேவைத் துறையில் புதிதாக 155,638 பேர் பணிகளில் இணைந்து கொண்டுள்ளதுடன், கைத்தொழில் துறையில் 72,273 பேர்பணிகளில் இணைந்து கொண்டுள்ளனர்.

முதல் காலாண்டு பகுதியில் விவசாய துறையில் சுமார் 60,000 பேர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளனர்.

சனத்தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தகவல்களின் அடிப்படையில் இலங்கையில் கடந்த ஆண்டு வேலை வாய்ப்பு அற்றவர்களின் மொத்த வீதம் 4 முதல் 5 வீதமாக காணப்பட்டுள்ளது.

SHARE