இலங்கையில் 2023ல் அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

106

கடந்த மாதம் திரைக்கு வந்த லியோ சில கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூலில் புதிய சாதனைகளை தொடர்ந்து படைத்து வருகிறது.

உலகளவில் இதுவரை ரூ. 578 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. அதே போல் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படமும் உலகளவில் ரூ. 625 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த மட்டுமின்றி இந்த வருடத்தின் ஆரம்பத்தில் வெளிவந்த வாரிசு மற்றும் துணிவு, தனுஷின் வாத்தி, சிவாகார்த்திகேயனின் மாவீரன் ஆகிய படங்களும் வசூலில் பட்டையை கிளப்பியது.

இந்நிலையில் இந்த ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் இலங்கையில் அதிகம் வசூல் செய்து படங்கள் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.

டாப் 10 தமிழ் திரைப்படங்கள்
இலங்கை நாட்டின் பணமதிப்பை குறிப்பிட்டு தான் இந்த லிஸ்டில் வரும் படங்களின் வசூல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் – ரூ. 20 கோடி
லியோ – ரூ. 17.9 கோடி
வாரிசு – ரூ. 13 கோடி
பொன்னியின் செல்வன் 2 – ரூ. 12.6 கோடி
துணிவு – ரூ. 6.6 கோடி
மாவீரன் – ரூ. 3.6 கோடி
வாத்தி – ரூ. 3.4 கோடி
ஜவான் – ரூ. 3.4 கோடி
பதான் – ரூ. 1.3 கோடி
பத்து தல – ரூ. 1.2 கோடி

SHARE