இலங்கையில் 6000 ஆண்டுகளுக்கு முன்னரே அரிசியை சாப்பிட்ட ஆதிமனிதன்

305
இலங்கையில் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஆதிமனிதர்கள் அரிசியை உணவாகச் சாப்பிட ஆரம்பித்துள்ளனர் என்று அண்மைய அகழ்வாராய்ச்சிகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

ஹோமோ சபியன்ஸ் என்ற மனித இனத்தவரே இவ்வாறு அரிசியை உணவாக சாப்பிட்டுள்ளனர்.

பலாங்கொட- இலுக்கும்பர பிரதேசத்தில் வரலாற்றுக் காலத்துக்கு முந்திய காலத்தில் பயன்படுத்தப்பட்ட குகை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போதே தெரியவந்துள்ளது.

இங்கிருந்து நெல் உள்ளிட்ட தானியங்கள் ஆராய்ச்சியாளர்களினால் கண்டுபிடிக்ககப்பட்டுள்ளன.

இந்தக் கண்டுபிடிப்பு, இலங்கையில் நெல் நுகர்வு பற்றிய வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று பேராதனைப் பல்கலைக்கழக அகழ்வாராச்சி பட்டப் பின்படிப்பு நிறுவகத்தின் மூத்த பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.

SHARE