இலங்கையுடனான உறவுகளை மேலம் விஸ்தரிக்க விரும்புவதாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் குராம் டாஸ்டிகர் கான், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேற்றைய தினம் அலரி மாளிகையில் வைத்து சந்தித்திருந்தார்.
தாம் உள்ளிட்ட பாகிஸ்தான் பிரதிநிதிகளுக்கு இலங்கை அரசாங்கமும் மக்களும் வழங்கிய வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் வெற்றிக்கு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியை பகிர்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் பல்வகைப்படுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிராந்திய வலயத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் மிகச் சிறந்த உறவு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.