இலங்கையுடனான கலாச்சார உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் – சீனா:-

288

இலங்கையுடனான கலாச்சார உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என சீனா அறிவித்துள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர் யீ ஸியான்லியாங் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மரபு ரீதியான நட்பு நாடு என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 70 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் பௌத்த மதத்தை வழிபட்டு வருவதாகவும், இலங்கை பௌத்த சமூகத்துடன் சீனா சிறந்த தொடர்புகளை பேணி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சீனத்தூதரக ஒத்துழைப்புடன் 100க்கும் மேற்பட்ட சீன பௌத்த துறவிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
150க்கும் மேற்பட்ட இலங்கை பௌத்த பிக்குகள் சீனாவிற்கு விஜயம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE