இலங்கை மீனவர்களுடன் நான்காம் கட்ட பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க ராஜதந்திர முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய தேசிய மீன்பிடித்தொழிலாளர்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலமே இலங்கையின் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க முடியும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை எல்லைத்தாண்டும் மீனவர்களை கைது செய்ய வேண்டாம் என்று இலங்கையை, இந்திய அமைச்சர் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று பேரவையின் தலைவர் எம்.இளங்கோ தெரிவித்துள்ளார்