இலங்கையை பெருமை படுத்துகிறீர்கள்!

133

இலங்கையை சேர்ந்த 16 வயது சிறுமி ஒலிம்பிக்கில் சாதித்ததற்கு குமார் சங்ககாரா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் ரசிகர் ஒருவர் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான குமார் சங்ககாராவை டேக் செய்து ஒரு பதிவிட்டார்.

அதில், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இலங்கை பெண்ணான 16 வயது பரமி மரிஸ்டெல்லா, இளைஞர் ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார் என குறிப்பிட்டார்.

இதற்கு பதில் பதிவிட்ட சங்ககாரா, அற்புதமான முயற்சி, வாழ்த்துக்கள், இலங்கையை பெருமை படுத்துகிறீர்கள் என பதிவிட்டுள்ளார்.

 

SHARE