இலங்கையை முற்றுகையிட்டுள்ள சர்வதேசப் புலனாய்வு – நடக்கப்போவது என்ன?

278

இலங்கை சுதந்திரமடைந்து 1948ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை அரசை தனது பன்டைய மாற்றுத் தேவைகளுக்காக பயன்படுத்தி வந்த இந்தியரசு படிப்படியாக அதன் புலனாய்வு நடவடிக்கையை இலங்கையில் திட்டமிட்டுத் தொடர ஆரம்பித்தது. அதன் பின்னர் 1990ம் ஆண்டு காலப்பகுதிகளில் தமிழீழ விடுதலைப்புலிகளுடைய மோதல்கள் இலங்கை இராணுவத்துடன் தீவிரமாக வெடிக்க அதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இந்தியரசு நிரந்தரமாகவே தனது ‘றோ’ நடவடிக்கைகளை ஆரம்பித்துக் கொண்டது. தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையினர் தமக்கு இதுவரை தலையிடி கொடுத்துவருவதாகவே அரசாங்கம் கருதிக்கொண்டு இன்னமும் அப்பாவி பொதுமக்களை கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

maithiri_obama_001
சீனா, இந்தியா, பாக்கிஸ்தான், அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்சியா, நோர்வே, தென்னாபிரிக்கா, லண்டன், கனடா போன்ற நாடுகளில் புலனாய்வுக் கட்டமைப்பினர் தூதரகம் என்ற போர்வையில் தமது தேவைக்கேற்ப புலனாய்வு நடடிக்கைகளை செய்து கொண்டு வடகிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்கின்ற போர்வையில் மீள்குடியேற்ற வீட்டுக் கட்டமைப்புகள், பால நிர்மானங்கள், பாதை சீரமைப்புக்கள் என்ற போர்வையில் தமது புலனாய்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கின்றன. குறிப்பாக கூகுள் நிறுவனமானது இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அனைத்துப் பகுதிகளையும் வரைபடத்துடன் ஆவணப்படுத்தியுள்ளது. கையடக்கத் தொலைபேசியிலேயே அணைத்து விடயங்களையும் பார்க்கும் அளவுக்கு இந்த கூகுள் நிறுவனத்தினால் புலனாய்வுத் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது உலக அரங்கில் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தியே தாக்குதல் நடத்தப்படுகின்றது.

2-33
மிகமுக்கியமாக சீனா இந்தியா அமெரிக்கா இந்த மூன்று நாடுகளினுடைய புலனாய்வு கட்டமைப்புக்களும் இலங்கையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளையும் அதன் தொகுதிகளையும் தம்வசப்படுத்தியுள்ளது. மேற்க்கத்தைய நாடுகளின் தலையீட்டை விரும்பாத ஒருவராகவே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் செயற்பட்டு வந்தார். அவர் இறுதிக் காலத்திலும் சர்வதேச நாடுகளை நம்பவில்லை. உலக வரலாற்றில் ஆயிரக்கணக்கான ஊடகவியலாளர்கள் சந்தித்து நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாடுதான் தேசியத்தலைவர் பிரபாகரன் வன்னியில் நடத்திய மிகப்பெரிய ஊடகவியலாளர் சந்திப்பாகும். எந்தொரு நாட்டிலும் பெருமளவிலான ஊடகவியலாளர்கள் பங்கு பற்றிய சந்தர்ப்பம் நிகழ்ந்து விடவில்லை. இதனைப் பயன்படுத்திய இரகசியப் புலனாய்வுகள் அனைத்தும் வன்னிநிலப்பரப்புக்குள் உள்நுழைந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், பிரசித்திபெற்ற ஊடக நிறுவனங்கள் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
இக்காலகட்டத்தின் போது இலங்கையில் ஊடுருவிய சர்வதேசப் புலனாய்வு ஊடகவியலாளர்கள் பிரபாகரனின் போராட்டத்தை எவ்வாறு மழுங்கடிக்கலாம் என்ற சதித்திட்டத்தை வகுத்து அதனை ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளனர். தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருப்பது ரணில் விக்கிரமசிங்கவினுடைய கூட்டாட்சியே. ரணில் விக்கிரமசிங்கவினுடைய கூட்டாச்சியை இந்நாட்டில் நிலை நிறுத்தினால் தான் சர்வதேச நாடுகளின் புலனாய்வுகளை இந்நாட்டிலே நிலை நிறுத்தமுடியும் என்ற காரணத்தினாலே இந்த ஆட்சி மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதே தற்பொழுதும் நடைமுறைப்படுத்தப்பட்ட வண்ணமும் உள்ளது சர்வதேச நாடுகள் தங்கு தடையின்றி இலங்கையில் எப்பாகத்திலும் சென்று வரக்கூடிய சூழ்நிலை உருவாக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளினுடைய மிக முக்கியமான நோக்கம் என்னவென்றால் இலங்கை தேசத்தினையும் ஒரு சர்வதேச சந்தையாக்கி கலை, கலாச்சாரம் என்பவற்றைச் சீர்குழைத்து பாலியல் கலாச்சாரத்தை தொழிலாக்கி அதனோடு உள்ளாசப் பயணிகளுடையை வருகையை அதிகரிக்கச் செய்து இனவாதம், அல்லது மனவாதம், போர் வடுக்கள் என்பவற்றிலிருந்து மாற்றத்தைக் கொண்டு வருவதேயாகும்.

xi-ranil-1
மற்றுமொரு காரணம் உலக மகாயுத்தம் ஒன்று ஆரம்பிக்கப்படுமாக இருந்தால் இலங்கையின் தளம் அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் குறிப்பாக திருகோணமலைத் துறைமுகம் குறிப்பிடத்தக்கது. நிலமை இவ்வாறு இருக்க உள்ளுர் உளவாளிகளாக தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் செயற்படுகின்றனர் என்று மேலும் காரணம் காட்டி அப்பாவி பொதுமக்களைக் கைது செய்து புனவர்வாழ்வு பெற்ற போராளிகளை முடக்கி அவர்களைப் பயமுறுத்தி மீண்டும் ஒரு அடக்கு முறையை உருவாக்கி ஆயுதம் ஏந்திப் போராடும் நிலையை இவ் அரசாங்கம் செயற்படுத்தி வருகின்றது.
சர்வதேச நாடுகளின் புலனாய்வுக்குழுக்களை இந்நாட்டிலிருந்து அப்புறப்படுத்தமுடியாது அவர்கள் சொல்லும் செயல்களையே இவர்கள் செய்து வருகின்றனர். இந்நாடுகளினால் ஏற்படக் கூடிய பாதகத் தன்மையை தெளிவாக விளங்கிக் கொண்டும் எதுவுமே செய்யமுடியாத நிலையில் பல்லுப் பிடிங்கிய பாம்பைப் போல் இவர்கள் செயற்பட்டு வருவது தனது சொந்த மனைவியிடம் வீரத்தைக் காட்டுவது போன்ற செயலாகும். கடைசியில் இந்நாடு சர்வதேச நாடொன்றின் துணை நாடாக மாற்றமடைகின்ற அபாய சூழ்நிலைக்குள் சென்று கொண்டிருப்பதை இலங்கையின் புலனாய்வுக் கட்டமைப்பு அறிந்தும் அறியாதது போல் செயற்படுவது இந் நாட்டை மேற்க்கத்தேயை நாடுகளுக்கு தாரைவார்க்கும் ஒரு செயலாகவே அவதானிக்க முடிகின்றது.

-நெற்றிப்பொறியன்-

SHARE