இலங்கையை வீழ்த்திய இந்தியா

151

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டி நேற்று வான்கடே மைதானத்தில் இடம்பெற்றது. நாணய சுழற்சியை வென்ற இலங்கை முதலில் பந்துவீசியது.

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றது. இந்தியாவின் தீபக் ஹூடா ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

இலங்கைக்கு 163 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட, 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 160 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர். இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் 45 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். சிவம் மாவி 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். அதனடிப்படையில் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

SHARE