இலங்கை அகதிகள், இந்தியாவிலிருந்து கூடுதலான பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள நாடு திரும்ப விரும்பினால் அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க உள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது.
பயணப் பொதிகளுக்கான எடையையும் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் கட்டணம் இன்றி 20 கிலோ கிராம் எடையுடைய பயணப் பொதிகளை எடுத்துச் செல்லவே அனுமதிக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது இந்த இந்த எடை 60 கிலோ கிராமாக உயர்த்தப்பட்டுள்ளது. தன்னார்வ அடிப்படையில் நாடு திரும்புவோருக்கு இவ்வாறு சலுகைகளை வழங்கத் திர்மானிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தினால் இந்த வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன.