சமீப காலமாக இலங்கை அணியின் செயல்பாடு கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
அதிரடி வீரர்களான குமார் சங்கக்காரா மற்றும் மஹேல ஜெயவர்த்தனே ஓய்விற்கு பிறகு இலங்கை அணி தடுமாறி வருகிறது என்றே சொல்ல வேண்டும்.
இந்நிலையில் இதுகுறித்து துடுப்பாட்ட வீரரான ஜெகன் முபாரக் கூறுகையில், இலங்கை மிகச் சிறிய நாடு, சங்கக்காரா மற்றும் ஜெயவர்த்தனே-வின் ஓய்வுக்கு பிறகு அவர்களுக்கு பதிலீடாக வீரர்களை களமிறக்குவது என்பது சவாலான விடயம் தான்.
திறமையான வீரர்களை கண்டுபிடிப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு வருடமாவது தேவைப்படும்.
அதுமட்டுமின்றி அனுபவ வீரர்களின் காயம் காரணமாகவும் அணியின் செயல்பாட்டில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவை பொறுத்தவரையில் திறமையான வீரர்கள் அதிகம் உள்ளனர் என்றும், இவர்கள் ஐபிஎல் போன்ற போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் மிக எளிதாக சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பழக்கம் கிடைக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
இதுவே இந்தியா சர்வதேச அளவில் கிரிக்கெட்டில் சிறந்து விளங்குவதற்கு காரணமாக அமைகிறது எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.