இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரை துணிச்சலுடன் அணுக வேண்டும்.

455

இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரை துணிச்சலுடன்  அணுகுமாறு இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் தனது அணி வீரர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

நாங்கள் துணிச்சலுடன் இருக்கவேண்டும் சில விடயங்களை வித்தியாசமாக செய்யவேண்டும்,நாங்கள் தைரியத்தை வெளிப்படுத்தவேண்டும் சிறிது ஆபத்தான முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

நாங்கள் கடந்த காலங்களில் முயற்சி செய்யாத ஆபத்தான சில விடயங்களை முயன்றாலே இலங்கையில் வெற்றி சாத்தியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் அவ்வாறு விளையாடுவது குறித்து அச்சப்படவில்லை,எனது அணி வீரர்களும் அது குறித்து அச்சப்படுபவர்களில்லை எனவும் ரூட் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஆடுகளங்கள் குறித்து நாங்கள பயப்படவில்லை பந்து சுழல்வது குறித்து அச்சப்படவில்லை எனவும்ரூட் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டில் மூன்று சுழற்பந்து வீச்சாளாகள் விளையாடுவார்கள் ஸ்டுவார்ட் புரோட் விளையாட மாட்டார் எனவும் ரூட் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 430 விக்கெட்களை வீழ்த்திய ஒருவரை அணியிலிருந்து நீக்குவது கடினம்  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE