இலங்கை அணியை கதி கலங்க வைத்த டோனியின் பினிசிங் வீடியோ

269

625.500.560.350.160.300.053.800.748.160.70 (5)

இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 பந்தில் 15 ஓட்டங்கள் குவித்த டோனியின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளின் தலைவரான டோனி இந்திய அணிக்காக பல்வேறு வெற்றிகளை தேடித்தந்துள்ளார்.

சிறந்த பினிசரான இவர் பல போட்டிகளில் குறைந்த பந்துகளில் அதிக ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியுள்ளார்.

அது போல 2013 ஆம் ஆண்டு யூலை 13 ஆம் திகதி நடைபெற்ற டி20 இறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதின.

இப்போட்டியின் இறுதி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 15 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இதில் இலங்கை அணி சார்பில் இறுதி ஓவரை இரங்கா வீசினார்.

முதல் பந்தை எதிர்கொண்ட டோனி பந்தை தவறவிட, இதனால் ஆட்டம் சூடுபிடித்தது. அடுத்த பந்தை எதிர்கொண்ட டோனி சிக்ஸர் அடிக்க 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அதற்கு அடுத்த பந்தில் நான்கு ஓட்டங்கள் அடித்ததின் மூலம் இந்திய ரசிகர்கள் சற்று நிதானம் அடைந்தனர்.

இதன் மூலம் கடைசி மூன்று பந்தில் 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது. பந்தை எதிர் கொண்ட டோனி அதையும் சிக்ஸர் பறக்க விட இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

மேலும் டோனி இந்த 15 ஓட்டங்களை 3 பந்துகளில் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

SHARE