இலங்கை அணியை வீழ்த்தியது பங்களாதேஷ்

157

 

2023ஆம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் பயிற்சி போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்களால் இலங்கை அணியை வீழ்த்தியுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் பயிற்சி போட்டிகள் இன்று (29) ஆரம்பமாகியுள்ளன.

முதல் பயிற்சி போட்டி
இன்று இடம்பெற்ற முதல் பயிற்சி போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இலங்கை அணி 49.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 263 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து ,264 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 42 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

நியூநிலாந்து – பாகிஸ்தான்
இதேவேளை, இன்று இடம்பெற்ற மற்றுமொரு பயிற்சிப் போட்டியில் நியூநிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில், நியூநிலாந்து விக்கெட்களால் வெற்றி வெற்றுள்ளது.

SHARE