இலங்கை அமைச்சர்களுடன் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் பேச்சு

247

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்காக உதவிச்செயலர் சார்ள்ஸ் எச்.றிவ்கின் நேற்று சிறிலங்கா அமைச்சர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இரண்டு நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் சிறிலங்கா வந்த சார்ள்ஸ் எச்.றிவ்கின் நேற்று, சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, அனைத்துலக வர்த்தக மற்றும் அபிவிருத்தி மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, அமைச்சர் ஏரான் விக்கிரமரத்ன, சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.

இருதரப்பு முதலீடு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தகத்தை மேலும் அதிகரிப்பது குறித்தே பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

மேலும், அமெரிக்காவுடன் வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ள சிறிலங்கா நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனும் அமெரிக்க உதவிச்செயலர் பேச்சுக்களை நடத்தினார்.malik-us

malik-us01

SHARE