அதிவிசேட செய்தி: மஹிந்த ராஜபக்ஷவுக்கு பேரிடியாய் வீழ்ந்த மற்றுமோர் தகவல்!
சிறிலங்காவின் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை இன்று கொண்டுவருவோம் என சில நிமிடங்களுக்கு முன்னர் நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி அறிவித்துள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்ததையடுத்து உயர் நீதிமன்றில் பலதரப்பினராலும் அதற்கு எதிரான மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்றும் நேற்று முந்தினமும் வழக்குகளை விசாரித்த மூன்று நீதியரசர்கள் அடங்கிய ஆயம் ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்தது.
இதேவேளை நாடாளுமன்றம் இன்றைய தினம் கூட்டபடும் என ஏற்கனவே வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரத்துச் செய்யாததால் இன்றைய தினம் நாடாளுமன்றம் கூடும் என சபாநாயகர் நேற்று அறிவித்தார்.
இதன்படி இன்றைய தினம் கட்சித் தலைவர்களை அவசரமாக அழைத்த சபா நாயகர் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். இந்த நிலையிலேயே ஜே.வி.பி மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.

இலங்கை அரசியலில் இன்றும் அடுத்ததும் என்ன நடக்கும்
1. பாராளுமன்றம் இன்று கூடும்
2. ரணில் பாராளுமன்றத்துக்கு வருவார்.
3. அலரிமாளிகையை கைப்பற்ற பாதுகாப்பு தரப்பு முயற்சிக்கும்
4.பாராளுமன்றத்தில் ரணில் பெரும்பான்மையை காண்பிப்பார்
5. சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் ஐ.தே.க பக்கம் தாவுவர்.
6. ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டு வரப்படும்.
7.அதில் ஐ.தே.க வெற்றிகரமாக வெற்றி பெறும் ஜனாதிபதி வீடு செல்வார்.
8. ரணில் ஜனாதிபதியாவார், பிரதமராக சஜித்தை நியமிப்பார்
9. பாராளுமன்றத்தின் தற்போதைய பதவிகாலத்தை அவ்வாறே இன்னும் 6 வருடங்கள், 3 மாதங்கள், 28 நாட்களுக்கு நீடிப்பார்.
10. மூத்த அரசியல்வாதிகள் பலர் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவர்