இலங்கை அரசியல்வாதியின் உறவினர் ஒருவர் கொழும்பிற்கு அருகில் 40 கோடி ரூபா பெறுமதியான அதி நவீன சொகுசு வீடு ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக தகவல்

186

இலங்கை அரசியல்வாதியின் உறவினர் ஒருவர் கொழும்பிற்கு அருகில் அதி நவீன சொகுசு வீடு ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சுமார் 40 கோடி ரூபா பெறுமதியான வீடு ஒன்றே கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வீட்டிற்கு செல்லும் வீதியின் இரு மருங்கிலும் சிறிய வீடுகள் மற்றும் பழைய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இவற்றின் பெறுமதியை விடவும் இரண்டு மடங்கு அதிகமாக பணம் செலுத்தி, அவற்றினை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.

அரசியல்வாதியுடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றுக்கு மீன் வழங்குனரான கோடீஸ்வரர் இந்த வீட்டினை வாங்கியுள்ளார். சொகுசு வீட்டில் டெனிஸ் மைதானம் மற்றும் நீச்சல் தடாகம் ஒன்றும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE