இலங்கை அரசியல் யாப்பு என்ற நூல் வெளியீடு செய்யப்பட்டது.

343

 

இலங்கை அரசியல் யாப்பு என்ற நூல் வெளியீடு செய்யப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் வரலாற்றுத்துறை விரிவுரையாளரும், சுயாதீன ஆராட்ச்சியாளருமான மு.திருநாவுக்கரசு எழுதிய ‘இலங்கை அரசியல் யாப்பு என்ற நூல் இன்று 06-08-2016 தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலய கலா மண்டபத்தில் வெளியீடு செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
unnamed (17) unnamed (18) unnamed (19) unnamed (20) unnamed (21) unnamed (24) unnamed (25)
வவுனியா தமிழ் சங்கத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் நூலின் முதற் பிரதியை பிரித்தானியா தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைச்செயலாளர் கலாநிதி இரவீந்திரநாதன் பெற்றுக் கொண்டார். அதனைத்தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் பிரதியைப் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தாத்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராஜா,இ.இந்திரராசா,திருமதி.அனந்தி சசிதரன், ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வில் கலந்து கொண்டு உரைநிகழ்த்திய அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்
யாப்பு பற்றிய விபரங்கள் பொது மக்களுக்கு விளக்குவதில்லை சமஸ்டி என்றால் என்ன? ஒற்றையாட்சி என்றால் என்ன? என்பது பற்றி தமிழ் மக்களுக்கு விளக்கக் சுடிய எத்தனை நூல்கள் வந்திருக்கின்றன? என கேள்வி எழுப்பினார்.
நடந்து முடிந்த பாதயாத்திரையானது மகிந்த பலமாக உள்ளதையே காட்டி நிற்கிறது என தெரிவித்தார். நாங்கள் வாக்களிக்கப்போகும்போது தெளிவாக இருக்க வேண்டும் ஏனேன்றால் நாங்கள் வாக்களிக்கப்போவது எங்கள் தலைவிதியை தீர்மானிக்கும் அரசியல் அமைப்புக்கு என சுட்டிக்காட்டினார்.
நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய வடமாகாண சபை உறுப்பினர் திருமதி.அனந்தி சசிதரன்
தமிழ் மக்களுடைய இன விடுதலைப் போரை மிக மோசமாக குற்றஞ்சாட் வெளியீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழ் மக்கள் மோசமானவர்கள் என சர்வதேசம் எண்ணக்கூடிய வகையில் புத்தகங்கள் திட்டமிட்டு எழுதப்பட்டுக்கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.
2008 காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் சமகால அரசியல் என்ற தலைப்பில் கிராம மட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட போது விரிவுரையாளர் திருநாவுக்கரசு தீர்க்கதரிசனமாக முள்ளிவாய்க்காலை நாங்கள் சென்றடைவோம் என்று தெரிவித்திருந்ததாக குறிப்பிட்டார்.
நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தாத்தன்
தமிழ் மக்களின் அரசியலமைப்புத்திட்டம் தொடர்பாக தென்நிலங்கை அரசியல்வாதிகளுக்கு அக்கறையில்லை என சுட்டிக்காட்டினார்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் இருக்கும் போட்டிகள் நம்பிக்கையீனங்கள் காரணமாக தனியாக முடிவுகள் எடுக்கும் நிலமை பாராளுமன்றத்திலே வருமாகவிருந்தால் நாங்கள் அதிலே ஒரு பங்கு தாரராக இருக்க மாட்டோம் என தெரிவித்தார்.
SHARE