இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் துணுக்காய் வலயக்கல்விப்பணிப்பாளரை
மாற்றக்கோரி மாபெரும் கண்டனப் பேரணியொன்று மாங்குளத்தில் இடம்
பெற்றுள்ளது.
மாங்குளம் எரிபொருள் நிலையத்தில் ஆரம்பமாகி ஆசிரியர்களினால்
இக்கண்டணப்பேரணி வலயக்கல்வி பணிமனை மட்டும் இப் பேரணி செல்லப்பட்டு 17
கோரிக்கைகளை முன் வைத்து ஆசிரியர் சங்கத்தினால் இக்கண்டனப்பேரணி இடம்
பெற்றுள்ளது.
இதற்கு ஆதரவு தெரிவித்து துணுக்காய் வலயக்கல்வி பணிப்பாளரை இடம் மாற்ற
வேண்டாமெனக்கோரி பெற்றோர்களினால் வலயக்கல்வி முன்பாக பேரணி
யொன்று இடம் பெற்றுள்ளது. இதில் பெருந்திரளான பெற்றோர்களும் பழைய
மாணவர்களும் முன்பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்றுள்ளனர். இச் சம்பவம்
தொடர்பாக துணுக்காய் வலயக்கல்விப்பணிப்பாளர் எல் மாலினி வெலின்ரன்
அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது ஆரம்பத்திலிருந்த பாடசாலைகளின்
வீதாசாரத்தினை விட தற்போது மாணவர்கள் 70 வீதமான சித்திகளைப் பெற்று
வருகின்றார்கள் இப் பிரச்சினைக்குரிய ஆசிரியர்களை இடம் மாற்றம்
செய்யப்படுவதும் பாடசாலை மாணவர்களின் சித்திகளை கூட்டுவதற்கும் சில நடவடிக்கைகளை
ஆசிரியர்களிடம் மேற் கொள்ளும் போது அவர்களிடமிருந்து சில பின்னடைவுகளை
சந்திக்க நேரிடும். ஏன கருத்து தெரிவித்துள்ளார். இது போன்ற பிரச்சினைகளை
எதிர்நோக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளiர். என கருத்து தெரிவித்துள்ளனர்.
கோபிகா.