இலங்கை – இந்திய- உறவுகள் எதிர்காலம் குறித்த நோக்குடவையாக அமைந்திருத்தல் வேண்டும். இலங்கை இளைஞர்கள் தங்களது அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்வதுடன் அவற்றை இந்தியாவின் வளர்ச்சியில் ஒரு பகுதியாக ஆக்கிக் கொள்ளவும் முடியும் என இந்திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து தெரிவித்தார்.
இலங்கை – இந்திய சங்கம் அதன் பிளாட்டினம் ஆண்டு நிறைவு விழாவினையும் இந்தியாவின் சுதந்திர தின விழாவையும் கடந்த 05ம் திகதி கொழும்பில் கொண்டாடியது. இந்திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து இந்த விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க, கொழும்பு மாநகர சபை முதல்வர் ரோசி சேனநாயக்க, சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய, இலங்கை – இந்திய சங்கத்தின் தலைவர் பிரகாஷ மற்றும் துறைசார் பிரமுகர்கள் பலரும் விழாவில் கலந்து கொண்டன. இவ் விழாவில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.