இலங்கை- இந்திய மீனவர்களுக்கு இடையில் 4ம்கட்ட பேச்சு இடம்பெற வேண்டுமென கோரிக்கை

330

இலங்கை- இந்திய மீனவர்களுக்கு இடையிலான நான்காம் கட்ட பேச்சுவார்த்தை தாமதமின்றி இடம்பெற வேண்டும் என்று தேசிய மீன்பிடித் தொழிலாளர்கள் பேரவையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாண்டிச்சேரியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய பேரவையின் தலைவர் எம் இளங்கோ,

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் இலங்கையில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி மீனவர்களின் 81 படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தவிடயத்தில் இந்திய மத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் தாம் அதிருப்தி கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகள் அனைத்தும் பழுதடைந்துள்ளன.

இதன்காரணமாக படகு உரிமையாளர்களான சிறிய மற்றும் நடுத்தர வருமானங்களை கொண்டவர்கள், தாம் பெற்ற கடன்களை மீளச்செலுத்த முடியாத நிலையில் உள்ளனர் என்றும் இளங்கோ தெரிவித்துள்ளார்.

fisherman

SHARE