இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு அவசியமானது என்று ஸ்ரீலங்க முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இலங்கைக்கான யப்பானிய தூதுவர் சுகனுமா கொனிச்சியுடனான சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை ஐ.நா தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்றும் யப்பானிய தூதுவரிடம் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உறுதியளித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போருக்குப் பின்னரான அபிவிருத்தி நடடவடிக்கைகiளில் யப்பான் முதலீடுகளை மேற்கொள்ள ஈடுபாடு செலுத்த வேண்டும் என்றும் இதன்போது அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரதான முஸ்லீம் கட்சியின் தலைவர் என்ற வகையில் ஐ.நா தீர்மானம் உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா என்று யப்பானிய தூதுவர் சுகனுமா கொனிச்சி அமைச்சர் ஹக்கீமிடம் கேள்வி எழுப்பினார்.
இதேவேளை யுத்தத்தினால் தமிழ் சிங்கள மக்கள் மாத்திரமின்றி முஸ்லீம் மக்களும் பாரிய பாதிப்புக்களுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும்இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
யுத்தத்தின்போது நிலவிய வறுமை தற்போது அகன்று வருவதாக குறிப்பிட்ட அமைச்சர் இலங்கையின் கல்வி நிலை வளர்ச்சியடைந்து வருவதாகவும் யப்பானிய தூதுவருக்குத் தெரிவித்தார்.