இலங்கை இராணுவம் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் குறிப்பிடத்தக்களவு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்

315

இலங்கை இராணுவத்தினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் குறிப்பிடத்தக்களவு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மெக்ஸ்வல் பரணகம அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பொதுமக்கள் உயிரிழப்பு பூச்சியமாக பேணப்பட்டது எனவும் பொதுமக்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தவில்லை எனவும் கடந்த அரசாங்கத் திட்டவட்டமாக அறிவித்து வந்தது.

எனினும், இலங்கை இராணுவம் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் குறிப்பிடத்தக்களவு பொதுமக்கள் இழப்பு ஏற்பட்டது என்பது சந்தேகமின்றி நிரூபணமாகியுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

படையினர் வைத்தியசாலைகளின் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இந்த தாக்குதல்களில் ஒரு அரசாங்க மருத்துவர் கூட உயிரிழக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

SHARE