இலங்கை உள்ளடங்கலான ஆசிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான சுங்க வரியைக் குறைத்துள்ளதாக சீனா நேற்று செவ்வாய்க்கிழமை அறிவிப்புச் செய்துள்ளது.
இதன் பிரகாரம் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், லாவோஸ், தென் கொரியா உள்ளடங்கலான நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கால்நடை தீவனமாக பயன்படும் சோயா அவரை உள்ளடங்கலான பொருட்களுக்கான சுங்க வரி எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து பூஜ்ஜியமாக குறைக்கப்படவுள்ளது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையிலான வர்த்தகப் போர் காரணமாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அவரை உற்பத்திகளுக்கான சுங்க வரி அதிகரிக்கப்படுகின்ற நிலையில் மேற்படி ஆசிய நாடுகளிலுமிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான சுங்க வரியை குறைக்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளது