இலங்கை ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு வழங்கி வரும் பங்களிப்பு பாராட்டுக்குரியது – பான் கீ மூன்

240

இலங்கை, ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு வழங்கி வரும் பங்களிப:பு பாராட்டுக்குரியது என அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

இலங்கை, ஐக்கிய நாடுகள் அமைப்பில் உறுப்புரிமை பெற்றுக் கொண்டு அறுபது ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சமாதானம், பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் நீடித்து நிலைக்கக் கூடிய அபிவிருத்தி போன்றவற்றை உறுதி செய்வதில் இணைந்து செயற்பட விரும்புவதாகவும் இலங்கையும் இந்த முனைப்புக்களில் பங்கேற்று வருகின்றமை வரவேற்கப்பட வேண்டியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைதி காக்கும் பணிகளில் இலங்கை சிறந்த பங்களிப்பினை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலக்குகளை இணைந்து பகிர்ந்து கொள்வதற்காக இலங்கைக்கு நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தல்களை ஒன்றாக இணைந்து எதிர்கொள்வதோடு, சந்தர்ப்பங்களை ஒன்றாக இணைந்து பகிர்ந்து கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார்

SHARE