இலங்கை கடற்பரப்பில் கரை ஒதுங்கிய பாரிய திமிங்கிலம்

474

கற்பிட்டிய – ஆலன்குடாவ கற்கரையில் 34 அடி நீளமான திமிங்கிலம் ஒன்றின் உடல் கரை ஒதுங்கியுள்ளது.

கரை ஒதுங்கிய திமிங்கிலத்தின் உடலில் பாரிய காயம் ஒன்று காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திமிங்கிலம் தொடர்பில் வனவிலங்கு தளத்தின் பாதுகாப்பாளர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

திமிங்கிலம் சில மாதங்களுக்கு முன்னர் காயமடைந்துள்ளதாகவும், கப்பல் மோதியமையினால் இந்த காயம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

பாரிய காயம் காரணமாக இந்த திமிங்கிலம் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

திமிங்கிலத்திற்கு பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளாமல் புதைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE