இலங்கை குண்டுவெடிப்பிற்கும் எனக்கும் தொடர்பில்லை என கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்
இந்து தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டதாக கடந்த செப்டம்பரில் கைதுசெய்யப்பட்ட பிணையில் விடுதலையான ஏழுபேரில் ஆசிக் என்பவரே இவ்வாறு தெரிவித்துள்ளார்
இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பிற்கும் கோவையில் கைதுசெய்யப்பட்டவர்களிற்கும் தொடர்புள்ளதாக இந்தியாவின் தேசிய புலனாய்வு பணியகம் தெரிவித்துள்ளது.
இவர்களிடமிருந்து கைப்பற்ற செல்போன்கள் வீடியோக்களின் அடிப்படையிலேயே இலங்கையில் குண்டு தாக்குதல்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக இலங்கை அரசாங்கத்திற்கு எச்சரி;க்கை செய்யப்பட்டதாக என்ஐ.பியின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இதேவேளை இன்று இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆசிக் இதனை நிராகரித்துள்ளார்
இலங்கையில் குண்டுவெடிப்புகளை மேற்கொண்ட குழுவிற்கும் எங்களிற்கும் எந்த தொடர்புமில்லை என தெரிவித்துள்ள அவர் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க அரசாங்கம் முயல்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
ஐஎஸ் அமைப்பை பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்னை கைதுசெய்ய பின்னர் தான் அந்த அமைப்பு குறித்து அறிந்துகொண்டேன் இலங்கையின் ஹசீப் தொடர்பான வீடியோக்கள் குறித்து எனக்கு தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்