ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு 38 நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன.
இலங்கை தொடர்பிலான தீர்மானம் வாக்கெடுப்பு எதுவுமின்றி, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் 16ம் திகதி வரையில் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
அல்பானியா, அவுஸ்திரேலியா, ஜெர்மனி, கிரேக்கம், லட்வியா, மொன்டன்கரோ, போலந்து, ரொமானியா, இலங்கை, மெசிடோனியா, பிரித்தானியா, வட அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளே இந்த தீர்மானத்திற்கு முதலில் அனுசரணை வழங்கியிருந்தன.
அதன் பின்னர் இந்த இணை அனுசரணை வழங்கும் நாடுகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.