இலங்கை குறித்த தீர்மானம் முக்கியமானது – ஜோன் கெரி

333
இலங்கை குறித்த தீர்மானம் முக்கியமானது – ஜோன் கெரி

இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவையில் நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச தீர்மானம் மிகவும் முக்கியமானது என அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசாங்கத்தினால் நம்பகமான நீதி விசாரணை நடத்தி நியாயம் வழங்க இந்த தீர்மானம் முக்கிய உந்து சக்தியாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மை, நீதி மற்றும் மீளவும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதனை தடுக்கும் நோக்கில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.நட்பு நாடு என்ற ரீதியில் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீர்மானம் நிறைவேற்றும் நாடுகளுடன் இணைந்து கொண்டு செயற்பட இலங்கை அரசாங்கம் எடுத்த தீர்மானம் முக்கியமானது எனவும், அனைவரும் இணைந்து செயற்படுவதன் மூலம் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இரண்டு தேர்தல்களில் இலங்கை மக்கள் சமாதானத்தை நிலைநாட்டும் நோக்கில் வாக்களித்திருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த தீர்மானம் அனைத்து இலங்கையர்களின் சிவில் உரிமைகளை உறுதிப்படுத்தி ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.மேலும், கடந்த கால கசப்புக்களுக்கு தீர்வு வழங்கி, மீளவும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை தடுக்கும் வகையில் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்களது குடும்பங்களுக்கு உதவும் வகையில் தீர்மானம் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். கௌரவமான முறையில் தொழில்சார் ஒழுக்கவிதிகளுக்கு அமைவாக கடமையாற்றிய படையதிகாரிகளின் நன்மதிப்பை மேம்படுத்தும் வகையிலும் இந்த தீர்மானம் அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE