சர்வதேச ரக்பி சம்மேளனத்தின் அதிகாரிகள் குழுவொன்று எதிர்வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.
இடைநிறுத்தப்பட்டுள்ள இலங்கையின் உறுப்புரிமை குறித்து கலந்துரையாடுவதற்காக அந்த குழு இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ரக்பி சம்மேளனத்தின் சர்வதேச உறவுகளின் தலைவர் டேவிட் கெரிடி, இலங்கை ரக்பியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹசன் சிங்ஹவன்சவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அதில் தமது குழு ஜூலை 4 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாகவும், ஜூலை 5 ஆம் திகதி பிற்கல் 2 மணிக்கு தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள ரிஸ்லி இல்யாஸ் தலைமையிலான அதிகாரிகள் குழுவுடன் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.