
இலங்கை டோகோவுடன் ராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்துக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும்இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள இந்த நடவடிக்கை வழியமைக்கும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
மேற்கு ஆபிரிக்க நாடான டோகோ, கானாவிற்கு அருகாமையில் அமைந்துள்ளது. வியன்னா பிரகடனத்தின் அடிப்படையில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, டோகோ வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ரொபர்ட் டுசி ஆகியோர் ராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்தல் குறித்த ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் ஆபிரிக்க நாடுகளுடன் உறவுகளை விஸ்தரித்து கொண்ட சந்தர்ப்பங்களில் தற்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடுமையான விமர்சனங்களையும் கிண்டல்களையும் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.