இலங்கை தமிழர்களின் அன்புக்கு இணையேயில்லை – பிரபல பாடகர் உருக்கம்

263

இலங்கை தமிழர்களின் அன்புக்கு இணையேயில்லை - பிரபல பாடகர் உருக்கம் - Cineulagam

தென்னிந்திய சினிமாவின் பிரபலமான பாடகர் ஸ்ரீநிவாஸ். இவர் சமீபத்தில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகத்தின் வரிகளில் இசையமைத்து பாடியிருந்த பாடல் அடடடா கதைப்போமா.

இலங்கை தமிழின் பெருமையையும், தமிழர்களின் கலாச்சாரத்தையும் போற்றும் விதமாக இப்பாடலை உருவாக்கியிருந்தார்.

யூடியுபில் இலங்கை நாதஸ்வர கலைஞர் கேபி குமரனின் இசையை கேட்டு வியந்த ஸ்ரீநிவாஸ் அவருடன் ஒரு பாடல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்ததாம்.

மேலும், யாழ்ப்பாணம் சென்றிருந்த போது இலங்கை மக்கள் காட்டிய அன்பின் வெளிப்பாடு தான் இந்த பாடல் என மனம் திறந்துள்ளார் ஸ்ரீநிவாஸ்.

SHARE