இலங்கை தமிழர்களின் சுவையான பாண் உணவு எப்படி செய்வது?

247

625-500-560-350-160-300-053-800-748-160-70

இலங்கை தமிழர்களின் அதிக வீடுகளில் காலை உணவு எதுவென்று கேட்டால், பாணும், சம்பல் என்று தான் சொல்வார்கள்.

கோதுமையால் செய்யப்படும் இந்த பாணுக்கு சைடிஷ் தேங்காய் சம்பல். இரண்டையும் சேர்த்து சாப்பிடும் போது தனிச்சுவை.

இந்த பாண் உணவினை இலங்கை தமிழர்களிள் அடையாளம் என்று கூட சொல்லலாம்.

கோதுமையால் செய்யப்படும் உணவு என்பதால், இதனை காலை, இரவு என இரு வேளைகளிலும் உணவாக எடுத்துக்கொள்ளலாம்.

அதனால், உடலுக்கு எவ்வித பிரச்சனைகளும் வராது.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 3 கப்

ஈஸ்ட் – 3 1/4 தேக்கரண்டி

உப்பு, சீனி – 1 தேக்கரண்டி

செய்முறை

மாவை அரித்து வைக்கவும்.

மிதமான சுடுதண்ணீ ரில் சீனியை கரைத்து அதனுள் ஈஸ்ட்டைப் போட்டு 5- 8 நிமிடங்கள் விடவும். ஈஸ்ட் நுரைத்து நன்கு பொங்கி வரும்.

பின்னர் மாவினுள் ஈஸ்ட் கரைசல் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவிற்கு போல சிறிது இளக்கமக நன்கு பிசையவும். ( 10 நிமிடங்கள்)

பின்னர் பிசைந்த மாவை பாண் அச்சினுள் போட்டு பரவி விட்டு 1 – 11/2 மணித்தியாலங்கள் மிதமான சூடுள்ள இடத்தில் வைக்கவும். பிரெட் அச்சு இல்லாவிட்டல் சிறிய உருண்டைகளாக்கி கப் கேக் அச்சினுள்ளும் வைக்கலாம்.

அவனை 400 Fahrenheit (பாரன்ஹீட்டில்) முற்சூடு செய்யவும்.

அச்சில் வைத்த மா இப்பொழுது நன்கு பொங்கி இருக்கும். இதனை முற்சூடு செய்த அவனில் 20 – 25 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

சூடான சுவையான பாண் தயார். இதனை சம்பல், குழம்புடன் அல்லது பட்டர், ஜாமுடன் சாப்பிடலாம்.

SHARE