இலங்கை தமிழர்களின் உணவுகள் மிகவும் ருசியாக இருக்கும்.
அவர்கள் சமைக்கும் அனைத்து உணவுகளிலும் தேங்காய் அதிகமாக சேர்க்கப்படும்.
நல்ல காரசாரமாக நாவுக்கு சுவையூட்டும் வகையில் இருக்கும் இலங்கை உணவுகளில் முக்கியமானவை புட்டு, சொதி, ரொட்டி சம்பல், அப்பம் போன்றவை ஆகும்.
அதுவும் கடல் உணவுகள் இலங்கையில் மிக பிரபலமான உணவு ஆகும்.
இதோ இலங்கை தமிழர்களின் ருசியான 5 உணவுகள்!

புட்டு
இந்த புட்டு இரண்டு வகைகளில் செய்யப்படுகிறது. ஒன்று குழா புட்டு மற்றொன்று சாதாரணமாக உதிரி போன்று இருக்கும். அதிகமாக மைதா மாவில் தான் இந்த புட்டு செய்யப்படுகிறது. இதனுடன் தேங்காய் சேர்க்கும்போது சுவை அதிகமாக இருக்கும்.வாழைப்பழம், தாக்களிக்குழம்பு, சொதி ஆகியவற்றை இந்த புட்டுக்கு சைடிஷ் ஆக சேர்த்துக்கொண்டால் நன்றாக இருக்கும்.

சொதி
தேங்காய்ப்பாலியில் செய்யப்படும் ஒரு ரெசிபி. காலை உணவாக இடியாப்பம் சாப்பிடும்போது, இந்த ரெசிப்பியை தாயார் செய்துகொள்ளுங்கள்.தேங்காய்ப்பாலில் அதிமாக தண்ணீர் கலந்துவிட்டால் ருசி இருக்காது. பச்சை மிளகாய் மற்றும் தக்காளி ஆகிய இரண்டையும் இந்த சொதியில் போதுமான அளவு பயன்படுத்தினால் ருசி அதிகரிக்கும்.

கடல் உணவுகள்
இலங்கை தமிழர்கள் அதிகமாக மாமிச உணவுகளை விட கடல் உணவுகளான மீன், இறால், நண்டு, கணவாய் ஆகியவற்றை விரும்பி சாப்பிடுவார்கள்.இந்த கடல் உணவுகளில் அதிகமாக ஆரோக்கிய சத்துக்கள் அடங்கியுள்ளன. மீன் குழம்பு என்று எடுத்துக்கொண்டால் தேங்காய்பால் விட்டு, மிளகாய் தூள் போதுமான அளவு சேர்த்து சமைத்தால் நன்றாக இருக்கும்.காரம் அதிகமாக விரும்பி சாப்பிடுகிறவர்கள், மிளகாய் தூளை அதிமாக சேர்த்துக்கொள்ளலாம். கூடவே இந்த கடல் உணவுகள் சமைக்கும்போது பூண்டு சேர்த்துக்கொள்ளுங்கள்.

ரொட்டி சம்பல்
மைதா மாவினால் தயாரிக்கப்படும் இந்த உணவு, காலை மற்றும் இரவு நேரங்களில் சாப்பிடலாம். ரொட்டி தயார் செய்யும் போது கொஞ்சம் எண்ணெய் மற்றும் அதிமாக தேங்காய் சேர்த்துக்கொண்டால் பதமாக இருக்கும்.இந்த ரொட்டிக்கு சைடிஷ் ஆக சம்பல் சேர்த்துக்கொள்ளுங்கள். அல்லது மீன் குழம்பு சேர்த்து சாப்பிடலாம். தேங்காய், வத்தல், வெங்காயம், உப்பு, புளி ஆகியவற்றை சேர்த்து உரலில் போட்டு நன்றாக இடித்தால் சம்பல் ரெடி, வெங்காயம், வத்தல் ஆகிய இரண்டையும் எண்ணெய்யில் சற்று வதக்கினால் ருசி அதிகரிக்கும்.
அப்பம்
பச்சரியில் தயாரிக்கப்படும் உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்&rc;&nc;விரும்பி சாப்பிடும் இந்த அப்பம் மிகவும் சுவையானது.பச்சரிசி மற்றும் தேங்காய் கலந்து செய்யப்படும் உணவு என்பதால் இதனை காலை உணவாக எடுத்துக்கொள்வதில் எவ்வித பிரச்சனையும் இருக்காது.பச்சரிசி ஜீரணமாக அதிக நேரம் எடுக்கும் என்பதால் இந்த உணவினை போதியவரை இரவில் தவிர்ப்பது நல்லது.&rc;&nc;