இலங்கை தமிழர்களை இந்தியா தனது மனதிலும் இரத்தத்திலும் சுமந்திருக்கிறது: நட்ராஜன்

295

இலங்கை தமிழ் மக்களை இந்தியா தனது மனதில் சுமந்திருக்கிறது என இந்திய துணைத் தூதுவர் ஆர்.நட்ராஜன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 67வது சுதந்திர தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணை தூதரகத்தில்  இன்று காலை 9 மணிக்கு கொண்டாடப்பட்டுள்ளது.

இந் நிகழ்வு இந்திய துணை தூதுவர் ஆர்.நட்ராஜன் தலமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அவர் முதன்மை உரையாற்றுகையில்,

இலங்கையில் உள்ள தமிழ் மக்களை இந்தியா தனது மனதிலும், இரத்ததிலும் சுமந்திருக்கிறது.

கடந்த 66 வருடங்களாக இந்தியா பல்வேறு இலக்குகளை எட்டியுள்ளது. குறிப்பாக தொழில்துறையிலும் பொருளாதாரத்திலும் வளர்ச்சி கண்டுள்ளது. தற்போது பொருளாதாரத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கும் இந்தியா இன்னமும் சில ஆண்டுகளில் சீனாவை பின் தள்ளி இரண்டாம் இடங்தை பிடித்து விடும் என உலக வங்கி கூறியுள்ளது.

இதனை விட இந்தியர்கள் சகல நாடுகளிலும் மிகவும் உயர்ந்த பல பதவிகளிலும் இருக்கின்றார்கள். அத்துடன் கல்வித்துறையிலும் வளர்ச்சியை கண்டுள்ளது.

இவ்வாறு இந்தியாவை பற்றி பெருமையாக பேசினாலும் இன்னமும் முன்னேற வேண்டிய தேவைப்பாடு உள்ளது.

இந்தியாவை பொறுத்த வரையில் எல்லாவற்றிலும் நாங்கள் தான் எல்லாம் எங்களுக்கு தான் தெரியும் என தம்பட்டம் அடிக்க கூடாது. அது இந்தியாவின் கொள்கையுமில்லை அவ்வாறான ஒரு பண்பாட்டை கடைபிடிப்பதும் இல்லை.

ஆனால் முன்னேற வேண்டும் என்பதில் உறுதியாகவே இருகின்றோம். அத்துடன் இந்திய நாட்டின் சுத்தம் பெண்களின் பாதுகாப்பு போன்றவற்றில் முன்னேற்றமடைய வேண்டும்.

மேலும் நாங்கள் எல்லோரையும் எங்கள் மனதிலேயே வைத்திருக்கின்றோம். இலங்கையர்கள் அதிலும் குறிப்பாக தமிழர்கள் எங்கள் மனதிலும் இரத்திலுமே உள்ளார்கள். நாங்கள் அவர்களை எங்கள் உறவினர்களாகவே பார்கின்றோம். என்றார்.

SHARE