இலங்கை துறைமுகத்தில் சீனா தனது அனு ஆயுதங்களை மறைத்து வைக்கும் ஆபத்து

617

30 நிமிடங்களில் அமெரிக்காவை தாக்கும் நவீன ஆயுதங்களை காட்சிப்படுத்தி, 70-வது ஆண்டு தேசிய தின அணிவகுப்பு மூலம் தனது ராணுவ வலிமையை உலகுக்கு வெளிப்படுத்தி உள்ளது சீனா.

சீனாவில் கம்யூனிஸ்ட் அரசு ஆட்சிக்கு வந்து இன்றுடன் 70வது ஆண்டுகள் ஆகிறது. பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்று பின்தங்கியிருந்த சீன நாடு,  கம்யூனிச புரட்சிக்கு பின், கடந்த 70 ஆண்டுகளாக வளர்ச்சியடைந்து, தற்போது மிகப்பெரிய வல்லரசு நாடாக உருவாகியுள்ளது.

இதை ஒட்டி தியான்மென் சதுக்கத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன,. இதனை நேரில் காண,  சுமார் 1 லட்சம் மக்கள் சீனக் கொடிகளுடன் திரண்டிருந்தனர்.

விழா துவக்கத்தில், 70 துப்பாக்கி குண்டுகள் முழங்க, 5 நட்சத்திரத்துடன் கூடிய செந்நிற சீன கொடி, கொடி கம்பத்தில் ஏற்றப்பட்டு, சீன கீதம் பாடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து சீன புரட்சியின் போது, உயிர் நீத்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன்பின்னர் சிறப்புரையாற்றிய சீன அதிபர் ஜி ஜின்பிங்,

சீனாவில் வசிக்கும் பலதரப்பட்ட மக்களுக்கும் தேசிய தின வாழ்த்துக்களைக் கூறினார்.

சீனா கம்யூனிஸ்ட் அரசு உருவாக உறுதுணையாக இருந்த வெளிநாடுகளில் வாழும் சீன மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

அதிபரின் உரையை அடுத்து, பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.

இருபிரிவுகளாக சுமார் 80 நிமிடங்கள் நடந்த கண்கவர் ராணுவ அணிவகுப்பை கூடியிருந்த அனைவரும் கண்டு களித்தனர்.

ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதை முடிந்ததும், ராணுவ தளவாடங்களின் அணி வகுப்பு நடைபெற்றது.

பீரங்கிகள், வானூர்தி, சிறிய தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணைகள் உள்ளிட்டவைகள் அணிவகுத்து சென்றன.

விமானப் படை மற்றும் காலாட் படைகளின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

அணிவகுப்பு நிகழ்ச்சியில், சிறிய, நடுத்தர ஏவுகணைகள், கண்டம் விட்டு கண்டம் தாவும் மிக நீண்ட தொலைவுக்கான டோங்பெங் ஏவுகணைகள் ஆகியன அணிவகுத்துச் சென்றன.

தேசிய தின அணி வகுப்பு மூலம் சீனா தனது ராணுவ வலிமையை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது.

தேசிய தின அணிவகுப்பில் 15,000 ராணுவ வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ராணுவத்தின் 59 வெவ்வேறு பிரிவுகளின் வீர்ர்கள் கலந்து கொண்டனர்,

அணிவகுப்பில் சீன ராணுவம் 160க்கும் மேற்பட்ட விமானங்களும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 580 வாகனங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்த ராணுவ அணிவகுப்பின் போது வெளியிடப்பட்ட ஆயுதங்களில் 40 சதவீதம் இதுவரை பகிரங்கமாக வெளிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

சீனாவின் மிகவும் மேம்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ஐசிபிஎம்) இது 14, 000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் சென்று இலக்கை தாக்க வல்லது.

டி.எஃப் -41 பூமியில் எந்தவொரு இலக்கையும் தாக்கும். தானாக இலக்கு தாக்கக்கூடிய அணு ஆயுதங்களை சுமக்கும் திறன் கொண்டது. அமெரிக்க எல்ஜிஎம் -30 மினிட்மேனை விட டிஎஃப் -41 இப்போது உலகின் மிக நீளமான ஏவுகணை ஆகும். இது 13,000 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்க வல்லது.

சீன பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி இந்த ஏவுகணை 30 நிமிடங்களுக்குள் அமெரிக்க கண்டத்தைத் தாக்கும் திறன் கொண்டது.

சீனாவிலிருந்து விமானத்தில் அமெரிக்கா செல்ல தூரம், 11,671 கிலோமீட்டர். மணிக்கு சுமார் 560 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தால் சுமார் 13 மணி நேரம் ஆகும். ஆனால்,சீன ஏவுகணை 30 நிமிடத்தில் அந்த தூரத்தைக் கடக்கும் திறன் கொண்டுள்ளது.

டோங்ஃபெங் -17 ஒரு குறுகிய முதல் நடுத்தர தூர ஏவுகணை ஆகும், இது ஹைப்பர்சோனிக் கிளைடு வாகனத்தை செலுத்தும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை ஒலியின் வேகத்தை தாண்டியது அமெரிக்க ஏவுகணைக் கவசங்களை ஊடுருவக்கூடிய திறன் உடையதாகும்.

தேசிய தின அணிவகுப்பின் போது சீனாவால் காட்சிப்படுத்தப்பட்ட மற்றொரு மேம்பட்ட ஆயுதம் HQ-9B வானில் இருந்தபடி பல ஏவுகணைகளைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

HQ-9B 100 கடல் மைல் தொலைவில் உள்ள இலக்கு விமானங்களைத் தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணைகள் தென் சீனக் கடலின் தெற்குப் பகுதியில் உள்ள எந்தவொரு கப்பலையும், பெரும்பாலான விமானங்களையும் குறிவைக்கக்கூடும்.

பேரணியில் சீனா தனது டி.எஃப் -26 “குவாம் கில்லர்” என்ற இடைநிலை தூர ஏவுகணையை காட்சிப்படுத்தியது. 3,000 முதல் 5,471 கி.மீ தூரத்தில் டி.எஃப் -26 அணு ஆயுத கப்பல் எதிர்ப்புக்கு பயன்படுத்தப்படலாம்.

சீன ராணுவம் ஒரு புதிய மற்றும் மேம்பட்ட ரேடார் அமைப்பையும் அணி வகுப்பில் கொண்டு சென்றது, இது “ஜெட் மற்றும் ஏவுகணைகளைக் கண்டறிய கூடியது.

ஆளில்லா ட்ரோன் தொழில்நுட்ப உபகரணங்களும் தேசிய தின அணிவகுப்பு காட்சியில் பங்கு கொண்டன.

இலங்கை துறைமுகத்தில் சீனா தனது அனு ஆயுதங்களை மறைத்து வைக்கும் ஆபத்து இவ்வாறான நிலையில் ஆசியப்பிராந்தியத்தில் இலங்கையில் நங்கூரம் இட்டுள்ள சீனா இலங்கையில் நேற்றைய தினம் போட் சிற்றி அமைப்பது தொடர்பில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது அதில் இலங்கைஅரசாங்கத்தால் பிரத்தியேகமாக தெரிவுசெய்யப்பட்ட5 பேர் கொண்ட குழுவே தீர்மானிக்கும் என் உள்ளது ஆகவே அங்கு என்ன நடக்கப்போகிறது என்பது பற்றி இலங்கை புலானாய்வு பிரிவினருக்கு கூட தகவல்கள் தெரியவராத நிலை ஏற்ப்படும் என்பது தான் உண்மைச சீனலங்கா என்று பெயர் வைத்தாலும் ஆச்சரியப்பட ஒண்றுமில்லை சீனா 2019 தனது 70 ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடியது
அன்று தம்மிடம் உள்ள சக்திவாய்ந்த அனுஆயுதங்களை கான்பித்தது அதைவிடவும் வலிமைiகாண்ட ஆயுதங்கள் அவர்களிடம் உள்ளது அதனை பாதுகாப்பாக வைப்பதங்கு இலங்கையை அச்சுறுத்தி தனது நடவடிக்கைகளை மேற்க்கொள்வதற்து இந்த கோட் சிற்றி பயன்படுத்தப்படலாம் என்று புலனாய்வு செய்திகள் தெரவிக்கின்றன

SHARE