இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் முடிவுகள் முழு உலகிற்கும் முக்கியமானது என அமெரிக்க புலனாய்வு பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் டெனிஸ் பிளயார் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொதுத் தேர்தல் முடிவு இந்திய பிராந்திய வலய நாடுகளைப் போன்றே முழு உலகிற்கும் முக்கியமானது.
தென்கிழக்காசியாவின் பிரதான போக்குவரத்து கேந்திர நிலையமாக இலங்கை காணப்படுகின்றது.
இலங்கையின் ஜனாநாயக நெறிமுறைமைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அமெரிக்க எதிர் கொள்கைகளை பின்பற்றினார்.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் எதிர்காலத்தில் உள்ளக சக்திகளே தீர்மானிக்கும் என டெனிஸ் பிளாயார் அமெரிக்காவின் தி டிப்ளோமட் என்ற சஞ்சிகைக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
பிளயார் அமெரிக்க புலனாய்வுப் பிரிவொன்றின் முன்னாள் பிரதானி என சிங்கள பத்திரிகையொன்று சுட்டிக்காட்டியுள்ளது.