தமது தேசிய பிராந்திய அரசியலை தக்கவைத்துக்கொள்வதற்காக அபி விருத்தியடைந்த நாடுகள் அபி விருத்தியடைந்துவரும் நாடுகளை குட்டிச்சுவராக்குவது அவர்களுடைய செயற்பாடுகளில் ஒன்று. மேற்கத்தேய நாடுகளில் நடைமுறை யில் இருக்கின்ற சோசலிஷம் என்பது வளர்ந்துவருவதன் ஊடாக அந்நாட்டில் வன்முறைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள் என்பனவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படுவதில் பாரிய பிரச்சினைகள் இருக்கின்றன. குறிப்பாக சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் சகஜமாகப் பழகும் நடைமுறைகள், ஆடல் பாடல் விடுதிகள், பாலியல் விடுதிகள், சூதாட்ட விடுதிகள் என்பனவும் ஏராளமாகக் காணப்படுகின்றது.
இவ்வாறான சிந்தனைகளோடு வளர்ந்துவரும் எந்தவொரு நாடும் ஆயுத வன்முறைக்குள்ளும், தீவிரப் போக்குடனும் செல்வதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. பாலியல் துஷ்பிரயோகத்திற்கு சிங்கப்பூரில் இருக்கக்கூடிய தண்டனைகள் மிக அதி கம். ஆனால் அவ்வாறான சம்பவங்கள் அங்கு பெரிமளவில் நடைபெறுவதில்லை. சிங்கப்பூர் மாத்திரமல்ல. இன்று ஆசிய நாடுகளில் பாலியல் ரீதியான வாழ்க்கை என்பது வாங்கலாம் விற்கலாம் என்பதுபோல் தாராளமாகவே நடைமுறை யில் இருக்கின்றது.
பிற நாட்டவர்களைக் கவரக்கூடிய வகையில் உல்லாசவிடுதிகள். இவற்றின் ஊடாக நாட்டின் வருமா னம் அதிகரிப்பு போன்றவற்றினையே அபிவிருத்தியடைந்த நாடுகள் எதிர்பார்த்துள்ளன. பொலிஸ் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்ட பிரதேசங்களை அண்மித்து மேற்கத்தேய நாடுகளில் பாலியல் நிலையங்கள் இருக்கின்றன. சமுதாயத்தில் இவ்வாறான அணுகுமுறைகளை மேற்கொள்வதன் ஊடாக யுத்த மனப்பாங்கில் உள்ளவர்களின் மன நிலையை மாற்றியமைக்கும் ஒரு ராஜதந்திர அணுகுமுறையாகவே இது பார்க்கப் படுகின்றது. ஆனால் அந்நாட்டின் கலை மற்றும் கலாசாரம் பாதிக்கப்படும்.
அரபு இராச்சியங்களைப் பொறுத்தவரை அவர்களுடைய கலை, கலாசாரம் என்பது அமெரிக்க நாட்டுடனும் ஏனைய நாடுகளுடன் ஒத்துவராது என்ற நிலையிலே ஈராக், ஈரான், லிபியா, சிரியா போன்ற நாடுகளுடன் போர் தொடுப்பதும், அந்நாடுகளை மேலோங்கச் செய்யாது பொருளாதார ரீதியில் அவற்றை மட்டுமல்ல, இராணுவ மற்றும் அணுசக்தி என்ற ரீதியிலும் ஒப்பந்த அடிப்படையில் தான் இந்த நாடுகள் இருக்கவேண்டும் என்பதே அபிவிருத்தியடைந்த நாடுகளின் எதிர்பார்ப்பு. அதனையே செயற்படுத்தி வருகின்றனர். அவ்வாறு அவர்கள் செயற்படாதுபோனால் அவர்களின் மீது வன்முறைகளை தூண்டிவிடுவதே இவர்களின் பொழுது போக்காக மாறியிருக்கின்றது.
இவ்வாறான நிலையையே தொடர்ச்சியாக வளர்ந்த நாடுகள் வளர்ந்துவரும் நாடுகள் மீது கடைப்பிடிக்க முனைகின்றன எனலாம். இலங்கை விடயத்திற்குள் வருகின்றபொழுது தமிழி னம் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்தவேளையில் மேற்கத்தேய நாடுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன. நாம் முன்னர் கட்டுரையில் குறிப்பிட்டது போல வளர்ந்த நாடுகள் தாராள மாக தமிழினத்தை அழிப்பதற்காக ஆயுதங்களை இலங்கையரசிற்கு வழங்கியிருந்தன. அக்காலகட்டத்தில் மாத்திரம் மௌனித்தவர்களாக இருந்துவிட்டு தற்போது இலங்கை மீது அக்கறைகொண்டு, இலங்கையில் இடம் பெற்றது இனப்படுகொலை என்பதை பறைசாற்றி, தனது பிராந்திய அரசியலை தக்கவைத்துக்கொள்வதற்காகவும் குறித்த நாடுகள் செயற்படுகின்றன. அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் இலங்கை நாடும், கடற்பரப்பும் தமக்குத் தேவையென போட்டியிடும் நாடுகளாக உருவாக்கம் பெற்றிருக்கின்றன.
இதனுடைய முக்கிய காரணம் என்னவென்றால் ஆசியப்பிராந்தியத்தில் ஒரு யுத்தம் ஆரம்பிக்கும்பொழுது இலங்கையின் கடல், வான், தரை பிராந்தியங்கள் இந்நாடுகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது. ஆகவேதான் இயற்கைத் துறைமுகமான திருகோண மலையினை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு இந்நாடுகள் இன்றும் முயற்சித்து வருகின்றன. விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு மூன்று முக்கிய காரணங்கள் இருக்கின்றன. அதாவது, விடுதலைப்புலிகளின் ஆகாயப்படையின் வளர்ச்சி, தற்கொலைப்படையினது வளர்ச்சி, கடற்படையின் வளர்ச்சி ஆகியனவே பிர தான காரணமாகும்.
டுவுவுநுயின் விமானப்படையின் வளர்ச்சியானது இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு மிகமுக்கியமாக ஆபத்தாக அமைந்தது. இந்தியாவின் கூடங்குளம் அணுஉலையைத் தாக்குவதற்கு விடுதலைப்புலிகள் முயற்சிகளை மேற்கொள்வார்கள் என்பதனாலேயே விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதற்கான நடவடிக்கையில் இந்தியரசு தீவிரம் காட்டுவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. ராஜீவ் காந்தியின் மீது தற்கொலைத்தாக்குதலை நடத்திய விடுதலைப்புலிகள் இந்தியாவின் அணுஉலைகளின் மீது தாக்குதலை நடத்துவார்களாகவிருந்தால் இந்தியாவின் அழிவிற்கே அது காரணமாக அமைந்துவிடும். இதுவே அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.
கடல் மார்க்கமாக விடுதலைப் புலிகளின் கட்டமைப்பு சிறந்து விளங்கியது. சமாதான காலப்பகுதிக்கு முன்னர் சர்வதேச கப்பல் ஒன்றினைக் கடத்தியதன் கப்பல்களின் உரிமை யாளர்கள் தமது காப்புறுதி உரிமைகளை ரத்துசெய்துகொண்டனர். இதனால் அமெரிக்கரசிற்கும் ஏனைய நாடுகளுக்கும் பெரும் பொருளாதார ரீதியில் வீழ்ச்சி ஏற்பட்டது. வர்த்தக முதலீட்டாளர்கள் தமது உடன்படிக்கைகளை ரத்துசெய்து கொண்டனர். இதனால் சர்வதேச நாடுக ளுடைய வர்த்தக சந்தையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
விடுதலைப்புலிகளுடைய கரும்புலிக் கட்டமைப்பானது எந்தச் சந்தர்ப்பத்திலும் மனித வெடிகுண்டுகளாக பிற நாடுகளை தாக்கியழிக்கலாம் என்பது உலக நாடுகளது அச்சம். அமெரிக்காவின் இரட்டைக்கோபுரத் தாக்குதல் இடம்பெற்றமையானது விடுதலைப்புலிகளை அழித் தொழிப்பதற்கு சாதகமாக அமைந்தது. நாம் முன்பு குறிப்பிட்டதுபோல விடுதலைப்புலிகளது போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய 52 நாடுகளும், 22 சர்வதேச அமைப்புக்களும் தோல் கொடுத்து வந்த அதேசமயம் திடீர் திருப்பம் ஒன்றினை ஏற்படுத்தியதற்கான காரணம் மேற்குறிப்பிட்டவையாகும்.
இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இலங்கையரசு பிறநாட்டு உதவிகளைப் பெற்றுக்கொண்டு தமிழினத்திற்கெதிரான கொடிய யுத்தத்தை சமாதான இடைவெளி யின் பின்னர் மாவிலாறில் ஆரம்பித்து முள்ளிவாய்க்காலில் முடிவுறச்செய்தது. விடுதலைப்புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்துவிட்டது என்றே அரசு எண்ணிக்கொண்டிருக்கிறது. தற்பொழுது அது ஜனநாயக ரீதியில் உருப்பெற்று இலங்கையின் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக தமிழர் ஒருவர் அமர்வதற்குத் துணைபோயுள்ளது என்பதுதான் உண்மை. போராட்ட வடிவங்கள் மாற்றம் பெற்றாலும் போர் பொறிமுறையானது மாற்றம் பெறவில்லை. விடுதலைப்புலிகளது புலனாய்வுக் கட்டமைப்பானது தொடர்ந்தும் சர்வதேச நாடுகளில் வளர்ச்சி கண்டுவருகின்றது.
இவை இவ்வாறு சென்றுகொண்டிருக்க முக்கியமான பகுதி என்னவென்றால் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அமெரிக்காவுடன் நெருங்கிய தொடர்புடையவர். ருNP கட்சியைத் தொடர்ந்தும் ஆட்சியில் தக்க வைத்துக்கொள்வதே அமெரிக்காவின் நீண்ட காலத்திட்டமாகும். அதனையே இன்று செயற்படுத்தியிருக்கிறது. ஒரு நாட்டின் உள்ளக யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஒரு பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டாரே தவிர, அவரைத் தொடர்ந்தும் அரசியலில் வைத்துக்கொள்வது சர்வதேச நாடுக ளின் நோக்கம் அல்ல. இந்தியாவுடன் விடுதலைப்புலிகளை மோதவைத்து தமி ழினத்தையும், விடுதலைப்புலிகளையும் இந்தியா எதிரியாகப் பார்க்க திட்டங்களைத் தீட்டியதைப்போன்று, தமிழினத்தை அழித்து மஹிந்த ராஜபக்ஷவின் அரசினை பிளவுபடுத்திய பெருமை அமெரிக்காவையே சாரும்.
இன்று தமிழ் மக்களுடைய ஏகபிரதிநிதிகளாகக் கருதப்படும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பாராளு மன்றில் எதிர்க்கட்சியின் ஆசனத்தை கைப்பற்றியிருக்கிறது என்றால் அனைத்துமே அமெரிக்காவினால் திட்டமிட்டே வகுக்கப்பட்டதாகும். கடந்த ஐ.நா சபையின் அமர்வின்போது மங்கள சமரவீர ஒரு கருத்தினைத் தெரிவித்தார். அதாவது அமெரிக்கப் பிரேணைக்கு நாம் ஆதரவு தருகின்றோம். தற்போது நாட்டில் நல்லாட்சி என்பதை தமிழ்-சிங்கள மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். முன்பிருந்த அரசாங்கத்தைப்போலல்ல. தமிழ் மக்களை பிரதிபலிக்கும் த.தே. கூட்டமைப்பே இன்று எதிர்க்கட்சியின் ஆசனத்தில் அமர்ந்திருக்கின்றது. இது ஒரு நல்ல விடயத்தை எடுத்துக்காட்டுகிறது. கடந்த காலங்களில் அவ்வாறான சந்தர்ப்பங்கள் வழங்கப்படவில்லை.
இன்று மேலும் பல பதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை உதாரணப்படுத்திப் பேசியதன் நோக்கம் சர்வதேச அரங்கில் தமிழின மும், சிங்கள இனமும் சமத்துவமாக வாழ்கிறது என்பதைக்காட்டவேயாகும். ஆகவே கலப்பு நீதிமன்றத்தின் ஊடாக போர்க்குற்ற விசாரணைக்கு தாம் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். நிலைமைகள் இவ்வாறு மாற்றம் பெறக்காரணம் தொடர்ந்தும் இந்த அரசாங்கத்தை மேற்கத்தேய நாடுகள் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்ப தேயாகும். முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்று உறுதியாகியுள்ளபோதிலும் இவற்றை இழுத்தடிப்புச்செய்துவந்த கடந்த கால அரசாங்கம் ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டது.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி கொடுங்கோல் ஆட்சியாக விமர்சிக்கப்பட்டது. தமிழ் மக்களை பொறுத்தவரை அண்ணன் வந்தாலும் தம்பி வந்தாலும் ஒன்றுதான் என்ற நிலைப்பாடே உள்ளது. சர்வதேச நாடுகளின் தலையீடு என்பது ஒரு சதிவலைப்பின்னல். இந்த சதிவலைக்குள் இலங்கையை சிக்கவைத்துக்கொண்டதும் அமெரிக்காதான். விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதற்கான நடவடிக் கைகளை மேற்கொண்டதும் இந்த அமெரிக்காதான். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமானது வெறுமனே சீனாவுடன் தனது நட்புறவினை பேணிவந்ததன் ஊடாக இந்தியாவும், அமெரிக்காவும் இலங்கையை பகைத்துக்கொண்டது.
சீன அரசு இலங்கையுடன் நட்புறவினை பேணிவந்ததன் விளைவுகளாக கடல் மார்;க்கமாக சீன போர்க்கப்பல்கள் தங்குதடையின்றி இலங்கையை வந்தடைவதற்கு அரசு ஒத்துழைப்புக்களை வழங்கியது. அது மட்டுமல்லாது இலங்கையின் கடல், வான் போக்குவரத்துப் பாதைகள் சீனாவிற்கு வழங்கப்பட்டமை. இதுவும் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாகவே இருந்துவந்தது. தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சியடைந்துள்ள வல்லரசுகள் தத்தம் அணுகுமுறைகளை எவ்வாறு நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதில் கரிசனை கொண்டு செயற்பட்டமையே பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர் அழிவுகளுக்கு காரணமாக அமைந்துவிட்டது.
ஈழக்கோரிக்கையை விடுதலைப்புலிகள் இறுதிவரை கைவிடவில்லை. தமிழீழ விடுதலைப்புலிகள் கெரில்லாப்போர் முறையிலான தாக்குதல்களை தொடர்ந்தும் மேற்கொண்டிருப்பார்களாக விருந்தால் இன்றும் விடுதலைப்புலிகள் இலங்கையில் இருந்திருப்பார்கள். அத்துடன் அவர்களின் தனி இராச்சியம் இலங்கையில் இருந்திருக்கவும் வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கும். வல்லரசுகளின் எதிர்ப்பினால் விடுதலைப்புலிகளின் வளர்ச்சியும், தமிழினத்தின் விடுதலைக்கான போராட்டமும் ஓரங் கட்டப்பட்டுவிட்டது.
மேற்குலக நாடுக ளின் செயற்பாடுகள் அனைத்தும் தமிழ் மக்கள் மீது அக்கறையினை செலுத்துவதற்காக அல்ல என்பதை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு புரிந்து கொள்ளவேண்டும். வெறுமனே பதவி மோகங்களுக்காகவும், சலுகைகளுக்காகவும் ஆசனங் களைத் தக்கவைத்துக்கொள் வோமாகவிருந்தால் மீண்டும் ஒரு அழிவினை சந்திக்கநேரிடும். தமிழி னம் இன்று தலைநிமிர்ந்து வாழ்வதற்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா கரனே வித்திட்டுச்சென்றுள்ளார் என்றே கூறவேண்டும்.
வல்லரசுகளுடைய அணுகுமுறை களையும் நாம் கவனத்திற்கொண்டு எமது செயற்பாடுகளை நகர்த்திச்செல்வதன் ஊடாக தமிழினத்திற்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ளமுடியும். இதுவரை காலமும் செயற்பட்டு வந்த அரசாங்கங்கள் சர்வதேச நாடுக ளுடன் இணைந்து தமிழினத்திற்கு துரோகத்தினையே செய்துவந்தன. இனியும் அதனையே செய்யப்போகின்றன. நாம் விழிப்புள்ளவர்களாக இருந்தால் மாத்திரமே வல்லரசுகளின் அணுகுமுறைகளில் வெற்றிகண்டு அரசிடமிருந்து தமிழினத்திற்கான விடிவினைப் பெற்றுக்கொள்ள இயலும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை இராணுவத்தினர் காட்டிக் கொடுக்கப்படமாட்டார்கள் என்ற உறுதிமொழியை அமெரிக்க அரசு ரணில் அவர்களுக்கு வழங்கிவிட்டது. இனப்படுகொலை என்று நிரூபிக்க காலத்தை இழுத்தடிப்புச்செய்து மாற்றுவழிகளைக் கையாண்டு இழப்பீடுகளை வழங்கும் திட்டமே இந்த வல்லரசுகளினால் அறிவிக்கப்படும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.
- சுழியோடி –