இலங்கை தொடர்பில் பராகுவே பாராளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றம்

343

இலங்கை தொடர்பில் பராகுவே பாராளுமன்றில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்க சர்வதேச பொறிமுறைமை அவசியமானது என வலியுறுத்தி இந்த தீர்மானம நிறைவேற்றப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பிலான தீர்மனம் நிறைவேற்றப்படவுள்ள நிலையில் பராகுவேவில் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டுமென பராகுவே பாரர்ளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுக்ள மனித உரிமைப் பேரவையின் ஒத்துழைப்புடன் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பராகுவே அரசாங்க அதிகாரிகள் அண்மையில் நாடு கடந்த தமிழீழ இராச்சிய பிரதிநிதிகளை சந்தித்து இலங்கை விவகாரம் குறித்து பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE