இலங்கைக்கு எதிரான டெஸ்டில் அரை சதம் கண்ட அஸ்வின் மொத்தமாக 2000 ஓட்டங்கள் மற்றும் 200 விக்கெட்டுகள் என்ற இரட்டை இலக்கை விரைவில் எட்டிய 4-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இலங்கை- இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய வீரர் புஜாரா அவுட் ஆனவுடன் ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்கினார். இலங்கை பந்துவீச்சை வெளுத்து வாங்கிய அஸ்வின் தனது 11வது டெஸ்ட் அரைச்சத்தை எட்டினார்.
இதையடுத்து ஒட்டு மொத்த டெஸ்ட் போட்டிகளில் 2000 ஓட்டங்களை அஸ்வின் தற்போது எடுத்துள்ளார்.
இதன் மூலம் 250 விக்கெட்கள் மற்றும் 2000 ஓட்டங்கள் என்ற இரட்டை இலக்கை அதிவேகமாக எட்டிய உலகின் நான்காவது கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் போத்தம், இம்ரான், கபில் ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.