இலங்கை தொழிலாளர் சங்கத்தின் தொழிலாளர் தின விழா

264

அட்டனில் இயங்கி வருகின்ற இலங்கை தொழிலாளர் சங்கம் எதிர்வரும் காலத்தில் சமூக வலையமைப்பாக கொண்டு சமூகம் சார்ந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும், இதில் அதிகபடியாக தோட்ட பகுதிகள் மற்றும் கிராம பகுதிகளை சேர்ந்த படித்த இளைஞர் யுவதிகளுக்கு அரச மற்றும் அரச சார்பற்ற திணைக்களங்களில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதை இலக்காக கொண்டும் மற்றும் ஏனைய பொது சேவைகளை இலக்காக கொண்டும் செயல்படவுள்ளதாக தொழிற்சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே.கே.பியதாஸ தெரிவித்தார்.

எதிர்வரும் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொழிற்சங்கத்தின் 12வது ஆண்டு பூர்த்தி விழாவும், 2016ம் ஆண்டிற்கான தொழிலாளர் தினத்தையும் இணைத்து அட்டன் டீ.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கை தொழிலாளர் சங்கம் தொழிற்சங்க மாத்திரமின்றி சமூக வலையமைப்பின் ஊடாக மாற்றம் பெறுவதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை அன்றைய தினத்தில் படித்த இளைஞர் யுவதிகள் தமது பூர்த்தி செய்யப்பட்ட சுயவிபர கோவைகளுடன் மண்டபத்தில் அமைக்கப்படுகின்ற தொழில் தகவல் பிரிவில் பதிவு செய்து கொள்ளும்படியும் கோரிக்கை விடுத்துள்ளார்.

(க.கிஷாந்தன்)

9f67bd7e-594f-4786-98e6-2832f72d3ff4

SHARE