இலங்கை பணிப் பெண்ணுக்கு மன்னிப்பு வழங்குங்கள்: ஸ்ரீலங்கா முஸ்லிம் பேரவை சவுதியிடம் கோரிக்கை

316

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப் பெண்ணை விடுதலை செய்யுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் பேரவை அந்த நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சவுதி அரசாங்கத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் பேரவை அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சவுதி சட்டங்களை அறியாதமையினாலேயே குறித்த பெண் அவ்வாறான தவறை இழைத்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே அவரை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் பேரவை அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE