இலங்கை பணியாளர்கள் 50 பேருக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு!

224

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சும் இஸ்ரேல் அரசுக்கும் இடையில் செய்துக்கொள்ளப்பட்ட வர்த்தக உடன்படிக்கையின் கீழ் இலங்கையின் 50 பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் இதனை தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் உள்ள முதியோர் மற்றும் ஊனமுற்றவர்களை பராமரிக்கும் பணிகளுக்காகவே, குறித்த 50 பேரும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இதற்கு 25-40 வயதான ஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கமுடியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரிகள் ஆங்கில மொழியில் சாதாரண அறிவைப் பெற்றிருப்பதுடன், இதற்கு முன் இஸ்ரேலில் தொழில் வாய்ப்பு பெறாதவர்களாக இருக்க வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் குறித்த வேலைவாய்ப்பு தொடர்பான விண்ணப்பங்கள், தொழில் தொடர்பான தகவல்கள், சம்பளம், வேலைபுரியும் கால எல்லை, உள்ளிட்ட விபரங்களை இலங்கை வேலைவாய்ப்பு காரியாலயத்தின் www.slbfe.lk என்ற இணையம் ஊடாக அறிந்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 7ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

SHARE