இலங்கை பாரியதொரு அனர்த்தத்துக்கு முகம்கொடுக்க வேண்டிவரும்- மங்கள சமரவீர

137

ஜனவரி முதலாம் திகதி முதல் நாட்டில் அரச சேவையாளர்களுக்கான சம்பளம், ஓய்வூதியர்களின் கொடுப்பனவு, சமுர்த்தி பயனாளிகளுக்கான உதவிகள் எதுவும் வழங்க முடியாமல் போவதுடன் முழு அரச இயந்திரமும் செயலிழக்கும் அபாயம் இருப்பதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இன்னும் 2 வாரங்களுக்குள் சட்டபூர்வமான அரசாங்கம் ஒன்றை அமைத்து புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்காவிட்டால் இலங்கை பாரியதொரு அனர்த்தத்துக்கு முகம்கொடுக்க வேண்டிவரும்.

ஜனவரி முதலாம் திகதி முதல் நாட்டில் அரச சேவையாளர்களுக்கான சம்பளம், ஓய்வூதியர்களின் கொடுப்பனவு, சமுர்த்தி பயனாளிகளுக்கான உதவிகள் எதுவும் வழங்க முடியாமல் போவதுடன் முழு அரச இயந்திரமும் செயலிழக்கும் அபாயம் இருக்கின்றது.

அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டமோ இடைக்கால வரவு செலவுத் திட்டமோ இதுவரை முன்வைக்கப்படவில்லை. அதற்கு சட்டபூர்வ நிதி அமைச்சரும் நாட்டில் இல்லை.

ஆகவே நாட்டை காட்டிக்கொடுக்காமல் உடனடியாக சட்டபூர்வமான அரசாங்கம் ஒன்றை அமைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

SHARE