இலங்கை பெண்ணுக்கு குவைத்தில் மரண தண்டனை

286
போதைப் பொருளை கடத்திச் சென்றமை தொடர்பான குற்றச்சாட்டின் பெயரில் இலங்கை பெண்ணொருவருடன் மூன்று இந்திய பிரஜைகளுக்கு குவைத் குற்றவியல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

இலங்கை பெண்ணுடன் இணைந்து கேரளாவை சேர்ந்த மூன்று இந்தியர்களும் போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இவர்களில் ஒருவர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டதை அடுத்து, ஏனையோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து இவர்களுக்கு எதிராக போதைப் பொருள் விநியோக குற்றச்சாட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

எனினும், மரண தண்டனை தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்ய இவர்களுக்கு 30 நாள் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக குவைத் ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

TamilDailyNews_8749309778214

SHARE