இலங்கைப் பெண்ணை போலித் திருமணம் செய்ய உடன்பட்ட சிங்கப்பூர் பிரஜை ஒருவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
36 வயதான குறித்த பிரஜை, சிங்கப்பூரின் வதிவிட விசாவை பெற்றுக்கொடுப்பதற்காக இலங்கை பெண் ஒருவரை போலித்திருமணம் செய்துக்கொள்ள இணங்கியுள்ளார்.
இதற்காக குறித்த சிங்கப்பூர் பிரஜை எதிர்கொண்ட நிதிப்பிரச்சினையை சமாளிக்கும் வகையில் அவருக்கு உணவகம் ஒன்றை குறித்த இலங்கைப்பெண் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
இந்தநிலையிலேயே சிங்கப்பூர் பிரஜை, அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.