இலங்கை போக்குவரத்து சபை தனியார் மயப்படுத்தப்படுமா?

248

buses

இலங்கை போக்குவரத்து சபை எந்த நிலையிலும் தனியார் மயப்படுத்தப்படாது என போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று பாராளுமன்றத்தில் இலங்கை போக்குவரத்து சபையை தனியார் மயப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக உதய கம்மன்பிலவினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையின் சேவை தேசிய சொத்தாகும். எந்த ஒரு நிலையிலும் இந்த சேவையை தனியார் மயப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை எனவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE